தமிழன் பவுண்டேஷன் thamizhan foundation துவக்க விழா

 27ஜனவரி 20204 மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தமிழன் பவுண்டேஷன் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பெருமதிப்பிற்குரிய திரு. R நடராஜ் IPS DGP ( Retd ) சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு டுடே இதழின் சட்ட ஆலோசகரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான திரு இளஞ்செழியன், திரைப்பட நடிகர் திரு தீரன், தமிழ்நாடு டுடே இதழ் ஆசிரியர் திரு சதீஷ்குமார், தமிழ்நாடு டுடே உள்ளடக்க ஆசிரியர் திரு கவிஞர் கந்தன், தென்பொதிகை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும் கூட்டுறவு சார் பதிவாளருமான திரு மாரியப்பன், EUSU Logistic Private Limited பொது மேலாளர் (தென்னிந்தியா ) திரு D. விக்னேஷ், நியூஸ் 80 தமிழ் நிறுவனர் திரு. C. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவி, மற்றும் அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழன் பவுண்டேஷன் நிறுவனர் திரு. R சுதாகர் மற்றும் அறக்கட்டளை குழுவினர்கள் அனைவரும் உடல் உறுப்பு தானத்திற்கான உறுதிமொழி ஏற்று பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















































































R.  சுதாகர்
 நிறுவனர்
 தமிழன் பவுண்டேஷன்.







 தமிழன் பவுண்டேஷன் துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் எனது தமிழன் பவுண்டேஷன் குழுவினர் என்னை கௌரவிக்கும் விதமாக  பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் 

 மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 காது கேளாதோர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் வரவேற்பு நடனம், சாகச நடனம் புரிந்து  அனைவரது பாராட்டையும் பெற்ற குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது 


 தமிழன் பவுண்டேஷன் துவக்க விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு  சிறப்பித்த பெருமதிப்பிற்குரிய முன்னாள் டிஜிபி  Dr. R. நட்ராஜ் IPS DGP Retd அவர்களுக்கு தமிழன் பவுண்டேஷன் நிறுவனர்
திரு R. சுதாகர் அவர்கள் துவக்க விழா நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார்.   


 தமிழன் பவுண்டேஷன் துவக்க விழாவில் தமிழன் பவுண்டேஷன் சார்ந்த தன்னார்வலர்கள் உடல் உறுப்புகள் தான பதிவை மேற்கொண்டனர்.






 தமிழ் தாய் வாழ்த்து 




 மரியாதைக்குரிய முன்னாள் டிஜிபி திரு R.நடராஜ் IPS DGP Retd. அவர்கள் தமிழன் பவுண்டேஷன் நிறுவனர் திரு R.சுதாகர் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவித்த தருணம்.



Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழன் foundation கோடைக்கால நீருற்று 2024

74th Republic Day celebration